பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2018

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து அதனைச் சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குளத்தினது வான்பாயும் பகுதி உடைப்பெடுத்ததை உடனடியாக அவதானித்து புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டதால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதுடன், பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பினால் 6254 குடும்பங்களை சேர்ந்த 19841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 இடைத்தங்கல் முகாம்களில் 1623 குடும்பங்களைச்சேர்ந்த 4932 பேர் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள