பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2018

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

வவுணதீவில் வவுணதீவில் காவல் துறையினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தவேண்டியிருக்கும் என காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை முன்னாள் போராளிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் என காவல் துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்