பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2018

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய சபை அமர்வினை மஹிந்த தரப்பினர் புறக்கணித்துள்ளதுடன் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காது ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்துவதற்கு குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மஹிந்த தரப்பினர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்களென நேற்றையதினம் தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.