பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2019

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள்
அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.