பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2019

இன்று கூடுகிறது அமைச்சரவை; அதிரடி காட்டுவார் ஜனாதிபதி?

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இதன்படி மூன்று மாகாண சபைகளைக் கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமே ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்பது மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாகவே தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள தென் மாகாண சபை, ஊவா மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றைக் கலைக்க, ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பான ஆவணத்தில் அவர் பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் செல்லவதற்கு முன்னரே கையெழுத்திட்டுவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மே மாதம் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது