பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2019

ஜனாதிபதி சடடதரணியாகிய சத்தியப்பிரமணத்தின் பின்னரான திரு கே வி தவராசாவின் விருந்துபசார வைபவம்
-----------------------------------------------------------------------
இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .