பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2019

மலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தாதீர்’!


மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பட்ட அசாதாரண நிலைக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ், உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மலையக மக்களும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்லும் நிலைமையை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவனொளிபாத மலையின் பெயரை மாற்றி, மலையகத்தில் இனக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் இனவாதிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர், நேற்று (20) வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையின் பெயர்ப் பலகையை மாற்றுவதற்கு முயற்சிக்கும் குற்றவாளிகளை, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தயக்கம் காட்டப்படுவதாகவும், இதனால் மலையக மக்கள், மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியதுடன், இதுவா சகவாழ்வு இதுவா நல்லிணக்கம்? என்றும் கேள்வி எழுப்பினார்.

சிவனொளிபாத மலைக்கான பெயர் பலகை, மும்மொழிகளிலும் அமைய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர், நல்லதண்ணி பிரதேசத்தில், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



மேலும், நல்லதண்ணி பிரதேசத்தில் முறைகேடான காணிப்பகிர்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் நியாயமான விசாரணை ஒன்றின் மூலம் உண்மை வெளிக் கொணரப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.