பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2019

சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் தமயானியா சிகையிட்டமட்டிக்கும் (Mr. Damiano Sguaitamatti)  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையி
ல் சந்திப்பு ஒன்ற இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் சுவிஸ் திரும்பவுள்ள தமயானியா மரியாதை நிமித்தம்  ஆளுநரைச் சந்தித்ததாக ஆளுநர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.