பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2019

மட்டக்களப்பு பகுதியில் கோர விபத்து – ஐவர் பேர் பலி – 12 பேர் படுகாயம்
வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வேன் ஒன்றும் ட்ரெக்டர் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்