பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2019

கொழும்பில் வீசப்பட்ட புத்தர் சிலைகளால் பதற்றம்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள வடிகான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.விரைந்து செயற்பட்ட பொலிஸார் புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.