பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2019

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் செல்கிறார்.

இதனையொட்டி நேற்றுக் காலை முதல் கொழும்பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலையம் செல்வோர் சாதாரண வழித்தடத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக பாதுகாப்பு ஒத்திகைகளில் படையினரும் பொலிஸாரும் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து நேராக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தரும் பிரதமர்கள், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்கின்றனர். அங்கு ஜனாதிபதி வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்குச் செங்கம்பள வரவேற்பும் இராணு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படுகிறது.