பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2019

தமிழீழ செயற்பாட்டாளர் கனடா செல்வராசா மறைவு!



கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம்  கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்.
கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்
2009 போரின் பின்னடைவு அவருக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்து உடல் நலக்குறைவால் வாடினார். புலத்திலிருந்து தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பல்வகை பணிகளை பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரனால் வன்னிக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளமைப்பின் தலைமைகளோடு நேரடித்தொடர்புககை கொண்டிருந்த செயல்பாட்டாளர் செல்வராசா தனது தனிப்பட்ட குடும்பநிகழ்வுகளில் கூட தேசியக்கொடியை ஏற்றி கொடிவணக்கம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தின் துயரில் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேம்.
-நண்பர்கள்-