பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2019

கோத்தாவே தேசத் துரோகியே

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு தேசத் துரோகி என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு காரணமாகவிருந்த கோத்தாவும் தேசத்துரோகியே. அத்துடன் ராஜபக்ஷ காலத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையில் பல மோசமான தன்மைகளை நாம் மாற்றியுள்ளோம். மேலும் நாட்டுக்குத் தேவையான ஆரோக்கியமான உடன்படிக்கைகளையே நாம் தற்போது செய்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்