பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2019

பலாலியில் இருந்து ஒக்ரோபரில் விமான சேவை

பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது. பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வரும் செப்டெம்பரில் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒக்ரோபரில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இந்தக் கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.