பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2019

கோத்தாவின் கடவுச்சீட்டு- தொடங்கியது விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்‌ஷ, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவினால், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பிரஜையாவிருந்த கோத்தாபய ராஜபக்‌ஷ, புதிய தேசிய அடையாள அட்டையொன்றைப் பெற்றுக்கொண்டு, அதனூடாக கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.