பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2019

யாழ் அபிவிருத்தி தொடர்பில் ரணில் தலமையில் கூட்டம்

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

எதிர்வரும் காலத்தில் செய்யப்பட்ட உள்ள அபிவிருத்தி தொடர்பில் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இக் கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலுல் வடமாகாண திணைக்களத்தின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப்க பலரும் கலந்து கொண்டிருந்தனர்