பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2019

சஜித் - மைத்திரி இன்றிரவு சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியிடம் விடுத்த எழுத்து மூலமான கோரிக்கையை அடுத்து, இன்று இரவு சந்திப்பை நடத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியிடம் விடுத்த எழுத்து மூலமான கோரிக்கையை அடுத்து, இன்று இரவு சந்திப்பை நடத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கலந்து கொள்ளும் அணியினர் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இதுவரை இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், ஐதேகவுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது