பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2020

அசர்பைஜானில் 3 இலங்கை மாணவிகள் மூச்சுத் திணறி மரணம்

அசர்பைஜான் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும், இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் தீவிபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
அசர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடநெறியில் பயின்ற மூன்று இலங்கை மாணவிகளே நேற்றுமுன்தினம் தீவிபத்தில் உயிரிழந்தனர்.
அசர்பைஜான் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும், இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் தீவிபத்தினால் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடநெறியில் பயின்ற மூன்று இலங்கை மாணவிகளே நேற்றுமுன்தினம் தீவிபத்தில் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பாகு என்ற இடத்தில் அவர்கள் தங்கியிருந்த இரண்டு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் புகையை சுவாசித்து மூச்சுத் திணறியே குறித்த மூவரும் மரணமடைந்துள்ளனர். இதனை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது