பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2020

யாழில் அநியாயமாக பறிபோன இரண்டு உயிர்கள்! கிராமமே சோகத்தில்

காதல் தோல்வியால் தனது மகளான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை தாங்கிக் கொள்ளாத தாய் தனக்குத்தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

கொக்குவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த மகேஸ்வரன் தபேஸ்வரி (வயது 48) என்ற தாயே உயிரிழந்தவராவார் .

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்விகற்ற மேற்படி தாயின் மகள் கடந்த எட்டாம் திகதி காதல் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுத்து உயிரிழந்தார் .இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத தாய் அன்றைய தினமே பொலிசார் வீட்டில் விசாரணைகளை மேற்கொண்டு இருந்த போது தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர் .

இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

ஒரு காதல் தோல்வி காரணமாக இரு உயிர்கள் உயிரிழந்த சம்பவம் கொக்குவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.