பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2020

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு
யாழ் இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு போதைப் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி இன்று (30) யாழ் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் உள்ள காந்தி திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அதன் பின்னர் அங்கிருந்து ஆரம்பித்த இவ் நடைபவனியானது யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் உள்ள காந்தி திருவுருவச் சிலையை வந்தடைந்து.
இந் நிகழ்வில் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், யாழ் இந்தியத் துணைத் தூதுவராலய அதிகாரிகள், அருட் சகோதரர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.