பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2020

தமிழ் அரசியல் கைதிகளை பணயம் வைக்கிறது அரசு! உண்மையை வெளியிட்டார் சுமந்திரன்
தமிழ் அரசியல்கைதிகளைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டுசெயற்படுவதற்கு அரசு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி யுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந் திரன், அரசின் அந்த முயற்சிக்கு ஒருபோதும் இணங்கப் போதில் லை என்றும் தெரிவித்துள்ளார். சிறைகளிலுள்ள தமிழ் அர சியல் கைதிகளை விடுவிப்பதா னால் படையினருக்கு எதிரான குற்றங்களையும்கைவிடுங்கள் என்ற போக்கில் அரசு பேசஆரப் பித்துள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கை யில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைசெய்யப்படவேண்டும். கடந்த அரசு ஆட்சிக்கு வந்த போது அது சம்பந்தமாக நாங்கள் நிறைய நடவடிக்கை எடுத்து இருந்தவர்க ளில் அரைவாசிக்கு மேற்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட் டனர். இந்தப் பொறிமுறையின் மூலமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்குப் பிறகு அந்தப் பொறிமுறை தொடர்ந்து நடக்காமல் இருப்ப தற்குச் சில சட்டத்தரணிகள்தான் காரணமாக இருந்திருந்தார்கள். அதனால்தான் அந்தவிடுதலை தொடர்ந்து தடுக்கப்பட்டது.

அதற்குப்பிறகு அந்தப்பொறி முறையை நாங்கள் கொண்டு செல்லமுடியவில்லை. ஆனால் அதற்குப் பின்னரும் கூட பலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது எஞ்சியிருக்கிறவர்க ளின் விடுதலை சம்பந்தமாக நாங்கள் அரசுடன் பேசியிருக்கி றோம். அதில் ஐம்பதுக்கு மேற் பட்டவர்கள் ஏற்கனவே குற்ற வாளிகாகத் தீர்க்கப்பட்டவர்கள். ஜனாதிபதியின் மன்னிப்பின் ஊடாக மட்டும்தான் அவர்களை விடுதலை செய்யப்பட முடியும்.

ஜனாதிபதியும் அவரைச்சார்ந் தவர்கள் சிலரும் அண்மைக் காலத்தில் இரு பக்கத்திற்கும் மன்னிப்பு கொடுக்கலாம் என்ற ஒரு கதையை அவிழ்த்து விட்டி ருக்கிறார்கள். இது எங்களுக்கு முதலிலேயே தெரியும். அதாவது இவர்கள் இப்படித்தான் செய்ய எத்தனிப்பார்கள் என்று. ஆனால் அதையும் இதையும் ஒப்பிட முடியாது.

ஏனென்றால் அரசியல்கைதி கள் பல காலமாக சிறையில் இருந்திருக்கிறார்கள். நீதிமன் றப் பொறிமுறையில் குற்ற வாளிகாளகத் தீர்க்கப்பட்டவர் கள். என்னகுற்றத்தைச்செய்தார் கள் என்று குறிப்பாக தீர்க்கப் பட்டிருக்கிறது. அரசதரப்பில் ஒரு வரும் இன்னமும் நீதிமன்றத் தில் நிறுத்தப்படவில்லை . ஒருவ ரும் குற்றவாளியாகத் தீர்க்கப்பட வில்லை . ஆகவே முதலில் அது நடைபெற வேண்டும்.

அது நடைபெற்று குற்றவா ளிகள் என்றால் அவர்களும் நீண்டகாலமாகச்சிறையில் இருப் பார்கள் என்றால் இரண்டையும் நாங்கள் சமமாகப்பார்க்கலாம். ஆனால் இப்போது அதைச் செய்ய முடியாது.

ஆனால் அரசு இப்பொழுது இருக்கும் அரசியல்கைதிகளைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு இவர்களைவிடுதலை செய்வதாக இருந்தால் அரச தரப்பிற்கு எதிராக இருக்கும் குற் றங்களையும் கைவிடுங்கள் என்று சொல்கின்ற ஒரு போக் கிலே தான் பேச ஆரம்பித்திருக் கின்றார். இதற்கு ஒருபோதும் நாங்கள் இணங்கப் போவ தில்லை -என்றார்.