பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2020

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு சுவிசில் கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி, அவர் மேலும் கூறியுள்ளதாவது:உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவச இணைய வசதி வேண்டும்.

அனைவருக்கும், இலவச மற்றும் வெளிப்படையான இணையம் தேவை என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தரவுஇறையாண்மையும் முக்கியமானது.அது,பாதுகாக்கப்பட வேண்டும்.இணையம் என்பது, உண்மையில் ஒரு ஏற்றுமதி தயாரிப்பாகும். இந்தியாவில், 'யு டியூப்'பில் ஒருவர் வீடியோவை உருவாக்கினால், அது உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்களைப் பெறுகிறது.

இது தான், 'டிஜிட்டல்' பொருளாதாரத்தின் அழகு.ஆரம்ப காலத்தில் நான் ஒரு தொலைபேசி அல்லது தொலைக்காட்சிக்காக காத்திருக்க வேண்டியதிருந்தது.இந்த சாதனங்கள் என் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு முறையும், தொழில்நுட்பம் நம் வாழ்வில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கண்டேன். இப்போது, செயற்கை நுண்ணறிவு எப்படி மருத்துவம், வானிலை உள்ளிட்டவற்றில், சிறந்த ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை காண்கிறேன்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு மூலம் பாதுகாப்பை பெற முடியாது. அதற்கு, உலகளாவிய கட்டமைப்பு தேவை. இதற்கு, அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர்கூறினார்