பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2020

ஐ.நா உதவி ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவாவில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவாவில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா சென்றுள்ளார்.

முதற் கட்டமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார் . இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.