பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2020

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிப்பு
24 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், இலங்கை தொடர்பான விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லட் தயாரித்துள்ள இலங்கை குறித்த இடைக்கால அறிக்கை, இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லட் தயாரித்துள்ள இலங்கை குறித்த இடைக்கால அறிக்கை, இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 24 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் உத்தியோகப்பூர்மாக வெளியிடவுள்ளார்.

குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளும் இலங்கை தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாகவே ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஒரு நாடு தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் தயாரிக்கும் அறிக்கையானது அது வெளியிடப்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் பார்வைக்கு அனுப்பப்படுவது வழமை.

இந்நிலையிலேயே இலங்கை தொடர்பான அறிக்கையை ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதுதரகம் ஊடாக ஐ.நா.மனித உரிமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்தவகையில் குறித்த அறிக்கை தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சே ஐ.நா.மனித உரிமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். இதுவரை இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.