பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2020

அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பஅரங்கில் சந்திக்க வேண்டி வரும்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்
''பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இலங்கை அரசானது உயர் பதவிகளை வழங்கியமை மாபெரும் தவறாகும். இனியாவது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டு போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டு தமிழர்கள் சாகடிக்கப்பட்டமைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவும் முக்கியமானவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அவருக்கான பயணத்தடையையும் விதித்துள்ளது.
அமெரிக்காவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அரசு மதித்துச் செயற்பட வேண்டும்.
இலங்கை அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பகைத்து விட்டு தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டால் பாரிய விளைவுகளை சர்வதேச அரங்கில் சந்திக்க வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்