பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2020

ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஏ.ச்.எம், நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபயசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதிகள் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்