பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2020

திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3 வேட்புமனுக்கள் மற்றும் 10 சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்கள் அடங்கலாக 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3 வேட்புமனுக்கள் மற்றும் 10 சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்கள் அடங்கலாக 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சிங்கள தீப ஜாதிக பெரமுன, தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளது வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தினுடைய 15ஆவது பிரிவுக்கு அமைய கையளிக்கப்படாத வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதித் தேர்தல் ஆணையாளரும் திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

அதன்படி இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 27 அரசியல் குழுக்களது 189 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் நாடாளுமன்றத்திற்கு நான்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்