பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2020

வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு

வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வன்னி தேர்தல் தொகுதியில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த 34 சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் மௌவிம ஜனதா பெரமுன மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளின் வேட்புமனுக்களும் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கபட்டுள்ளன.

குறித்த வேட்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்திற்கமைவாக சமர்பிக்கப்படாமையினால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களிற்கான கட்டுப்பணம் மீள வழங்கப்படும் எனவும் சமன் பந்துலசேன தெரிவித்தார்.