பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2020

ஆராதனைக்கு சென்றோரை பதிவு செய்ய அழைப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி, இளையதம்பி வீதியில் உள் பிலதெல்பிய தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை உடனடியாக தமது பெயா், முகவாியை பதிவு செய்யுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்