பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2020

இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்

கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு நாளில் (திங்கட்கிழமை) மட்டும் 57 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் பரிசுக்குள் 27 பேர் அடையாளம் காணப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Seine-et-Marne மாவட்டத்தில் 13 பேரும், Yvelines மாவட்டத்தில் 25 பேரும், Seine-Saint-Denis மாவட்டத்தில் 16 பேரும், Val-de-Marne மாவட்டத்தில் 15 பேரும், அதிகபட்சமாக Val-d'Oise மாவட்டத்தில் 45 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, மேலும் 200 பேர்வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களின் பரிசோதனைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை எனவும் அறிய முடிகிறது.
பிரான்சில் மொத்தமாக 1,412 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.