பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2020

இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இத்தாலியப் பிரதமர் குஸ்ப்பே கொன்டெ (Giuseppe Conte) அதுகுறித்து சில மணி நேரத்திற்கு முன்னர் அறிவித்தார்.
பணிக்காவும் அவசர காரணங்களுக்காவும் மட்டும் இனி ஒருவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்.
அத்துடன், பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எளிதில் பாதிக்கப்பட்டக்கூடியவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்றிலிருந்து அந்தப் பயணத் தடை நடப்புக்கு வரும் என்றார் திரு. கொன்டெ.
இத்தாலியின் நன்மைக்காக ஏதாவது ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும் என்ற அவர், கடும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
காற்பந்தாட்டப் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் இத்தாலி முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் திரு. கொன்டெ அறிவித்தார்.
COVID-19 கிருமித்தொற்றால் இத்தாலியின் மாண்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 463க்கு உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் மேலும் 97 பேர் கிருமிப் பரவலால் மாண்டனர்