பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2020

இதுவரை 570 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடனே​யே, மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் விமான நிலைய நடவடிக்கைகள், விஷக்கிருமிகள் ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் சிறிது தாமதம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.