பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

7,600 கோடி லாபம் ஈட்டிய லைக்கா மோபைல் நிறுவனம்: வரலாற்றில் பெரும் சாதனை என்று கூறப்படுகிறது

லைக்கா மோபைல் நிறுவனம், 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து. இன்றுவரை சுமார் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும், லைக்கா மோபைல் நிறுவனம். பல நாடுகளில் உள்ள முக்கிய தொலைபேசி நிறுவனத்தின் சிக்னலை பெற்று. அதனை பயன்படுத்தி இன்ரர் நெட் சேவை ஊடாகவே தனது குறைந்த விலை தொலைத் தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது. இதனை (MVNO) மோபைல் வேச்சுவல் நெட்வேர்க் ஒப்பரேட்டர் என்று அழைப்பார்கள்.

இப்படி 24 நாடுகளில் இயங்கி வரும் லைக்கா மோபைல் நிறுவனத்தின், ஸ்பெயின் கிளையை, அன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் சுமார் 372 மில்லியன் யூரோக்களை கொடுத்து வாங்கியுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 7,600 கோடி ரூபா(இந்திய மதிப்பில் சுமார் 3,100கோடி ரூபா) ஆகும். வரலாற்றிலேயே ஒரு MVNO கம்பெனி இந்த விலையில் விற்க்கப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும். இது லைக்கா மோபைல் நிறுவனத்திற்கு, பெரும் மூலதனமாக அமைந்துள்ளது. இது போல இன்னும் 23 நாடுகளில் லைக்கா மோபைல் நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

லைக்கா மோபைல் நிறுவனம், தனது ஒரு சிறிய கிளையை மட்டும் விற்றே இத்தனை ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ள விடையம் உலக பொருளாதார சந்தையில் பெரும் சாதனையாக பார்கப்படுகிறது. அதுபோக சமீபத்தில் தனது சொந்த, நெட்வேர்க் ஒன்றை உகண்டா நாட்டில், லைக்கா மோபைல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.