பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2020

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு

தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

சிறீலங்கா அதிபர் தலைமையில் செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக சுட்டிக்காட்டின.

இந் நிலையில் குறைந்த பட்சம் பொதுத் தேர்தல் 3 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என அந்த தகவல்கள் கூறின. பாராளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்பு மனு தாக்கலின் பின்னர் அந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

மீள தேர்தல் இடம்பெறும் தினத்தை பின்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் கொரோனா நிலைமையால், ஏப்ரல் மாதத்தின் பின்னர் இந்த தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் தள்ளிப் போகலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன