பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2020

துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது


கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ‘துக்ளக்’ இதழின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, 1971-ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்நிலையில் பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளரான உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இம்மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்று கோரியும், ரஜினி மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரியும் உமாதி சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அம்மனு மீது விசாரணை முடிந்து நீதிமன்றம் செவ்வாயன்று வழங்கிய தீர்ப்பில், ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.