பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது

பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்கூட்டம் நேற்று மாலை பம்பலப்பிட்டியவில் நடைபெற்றது.

கொழும்பு கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன், கொழும்புக் கிளை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழரசுக்கட்சி கொழும்பில் போட்டியிட வேண்டும் என 80 வீதமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிரிந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுமானால் தமிழரசுக்கட்சி நிச்சயம் போட்டியிடும் என்று அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்