பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல் காரணங்களிற்காக அரசாங்கம் உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவதோடு பாடசாலைகளையும் திறக்க முயற்சிக்கின்றது. இந்தச் சாவுகள் பெரும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்

24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 427 பேர் சாவு
- வைத்தியசாலையில் 243 பேர் சாவு
- வயோதிப இல்லங்களில் 184 பேர் சாவு

பிரான்சின் மொத்தச் சாவுகள் 24.087

வைத்தியசாலையில் மொத்தச்சாவுகள் 15.053

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து மொத்தச் சாவுகள் 8.850

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 26 834

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 4.207 (-180)

தொற்று ஆரம்பித்தமையிலிருந்து 90.753 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15.500 பேர் அசரசிகிச்சைப் பிரிவில் (services de réanimation) அனுமதிக்கப்பட்டனர்.

48.200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)