பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2020

பிரான்ஸ் - இன்றுமுதல் : தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் விநியோகம்.
இன்று காலை இல்-து-பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்களில் உள்ள 130 நிலையங்களுக்கு 500,000 முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை RER அல்லது Transilien தொடருந்துகளை பயன்படுத்தியோருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இந்த முகக்கவசங்கள் பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டது.


இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் விநியோகிப்பதற்காக 30 மில்லியன் முகக்கவசங்களை சீனாவிடம் இருந்து வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.