பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2020

கொரோனா ஒத்துழைக்காத சுகாதார அதிகாரி தேவநேசன் காவலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செயல்திறனற்றவரை இளிச்சவாய் தீவக மக்களின் தலையில் கட்டியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்ற போதும் தற்போதைய கொரோனா நெருக்கடியினை முன்னிறுத்தி தேர்தல் ஆணைக்குழு அனுமதியுடன் வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வினைத்திறனற்ற அவர் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் மாகாண மற்றும் மத்திய அரசு அதிகார இழுப்பறியினால் அது கைவிடப்பட்டிருந்தது.

தற்போது அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு தூக்கியடிக்கப்பட்டதுடன் அவரது இடத்திற்கு குமாரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்