பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2020

தாயக தமிழர்களே  சிந்தியுங்கள் .செயல்படுங்கள் .பலமான அத்திவாரமொன்றை இப்பொழுதே  இடுங்கள்
------------------------------------------------------------------------------------
கொரோனாவின் தாக்கம் இன்னும் 2-3 மாதங்களில் முடிவடையலாம் .இருந்தாலும்  அதனால்  உண்டாகப்போகும்  பொருளாதார வீழ்ச்சி  ,மீண்டும் கட்டியெழுப்பும் திறன்  கேள்விக்குறியாகவே  பலம் வாய்ந்த மேற்கத்தைய நாடுகளில் காணப்படுகின்றது . பழைய நிலைக்கு திரும்ப  குறைந்தது 10  வருடங்களாகும் .  அத்தோடு இதட்கான சீர்திருத்த திட்ட்ங்கள் பல புதிதாக முன்னெடுக்கும் பட்ஷத்தில் சடட நடைமுறைகள் மாற்றப்படலாம் .  ஓய்வொஓதியம்  வேலையற்றோருக்கான கொடுப்பனவு சமூக சேவை கொடுப்பனவு  என பலவற்றில்கை வைக்கும்  நிலை  உண்டாகும் .  வளர்ச்சியடைந்த  உலகின் முதலீடாது நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இலங்கை போன்ற நாடுகளின்  கதி  கஸ்டமானது
புலம்பெயர் தமிழர்களில்   தாயகம் விட்டு  வந்து குடியேறிய முதல் தலைமுறை  60 வயதுகளின்  ஆரம்பத்துக்கு வந்துவிடடார்கள் . அதாவது  ஒய்வு பெறு ம் காலத்துக்குள் பிரவேசிப்பதால் அவர்களின்  வருமானம் குறைவடையும்  . புலம்பெயர் தமிழரிடையேயும் வேலை  இழப்புக்கள் சம்பளக்குறைப்பு  ஒய்வு நிலை போன்ற காரணிகளால்  பொருளாதார  வளம்  குறையும்.ஆதலால்  புலம்பெயர் தமிழரின் பொருள்வளம் தாயகம் நோக்கி நகர்வது   பெரிதாக குறைவடையும் .
 கடந்த  30  வருடங்களுக்கு மேலாக  இலங்கை தமிழரின் பொருளாதார அத்திவாரம்  புலம்பெயர் தமிழரையே  நேரடியாகவோ மறைமுகமாகவோ  தாங்கி நிக்கிறது  இலங்கை பொருளாதாரம் கூட  அப்படி தான் பெரும்பாலும்
புலம்பெயர் தமிழரின் ஆதரவு  குறையுமிடத்து  தாயகத்தமிழரிடையே  வேலையின்மை பட்டினிச்சாவு வறுமை தாண்டவம்  தாராளமாக . தாயக உறவுகளே இப்போதிருந்தே அத்திவாரமிடுங்கள் .   சுயதொழில் ,விவசாயம் மீன்பிடி கால்நடைவளர்ப்பு  அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என  உங்களை  நாட்டிடம்  கொள்ள  வைத்து  முயட்சி எடுத்து  உங்கள் வாழ்வை  வளம்பெற அத்திவாரமிடுங்கள்
பொழுதுபோக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் தரும் சோம்பேறி வாழ்வை  உதறி உங்களை நீங்களே  மாற்றிக்கொளுந்தங்கள்   நல்ல கல்வி வாய்ப்பு உள்ள   இப்போதைய நிலையில்   தரமான உயர்கல்வியை  கற்றுக்கொள்ளுங்கள்  புலத்து தமிழறிவும் ஆதரவில்  வாழும் பழக்கத்தை அறவே   விட்டுத்தள்ளுங்கள் .
ஆடம்பரமான  வசதியான  செலவழித்து  வாழும் வாழ்வை விட்டு  புரட்சி செய்யுங்கள்
  சேமிக்க பழகி கொள்ளுங்கள் அன்றாடம் உழைப்பதை சேமிக்க பழகுங்கள்
அரசாங்கத்தின் வீட்டுவசதி  சமுர்த்தி வசதி வங்கிகளின் கடன் வசதி  என்பவற்றை  உண்மையான  முன்னேற்றத்துக்கு  பயணப்படுத்துங்கள் நுண்கடன் போன்ற சீரழிக்கும் திட்ட்ங்களுக்கு நுழைந்து விடா தீர்கள்

முக்கியமாக  மதுப்பழக்கம் போதைவஸ்து பாவனை கலாசார சீரழிவுகளை  அறவே  கைவிடுங்கள் .  திருமண பந்தத்தை எமது கலாசார, மத வழிகாட்டல்கள் அடிப்படையில்  நல்லறமாக  கொண்டு  நடத்துங்கள்
இந்த கட்டுரையை பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது  நெஞ்சிலே நிறுத்தி வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில்  இதனை படித்ததில் பலனை அடைவதை உணர்வீர்கள் .