பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2020

பிரித்தானியர்கள் சிலர் இன்னும் திருந்தவில்லை..! நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வேதனை

பிரித்தானியாவில் சிலர் தேவையில்லாமல் வெளியே செல்வதன் மூலம் ஊரடங்கு சட்டங்களை மீறுகிறார்கள் என்பது நம்பமுடியாதது என்று நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

சன் பாத் செய்வது விதிகளுக்கு எதிரானது, பிரித்தானியாவின் வெப்பமான வானிலை அனுபவிக்க வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.

உடற்பயிற்சி உட்பட நான்கு அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே செல்வதை பிரித்தானியா தடை செய்துள்ளது,


வைரஸ் பரவுவதை குறைப்பதற்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் அவசியம், மேலும் அவற்றை தளர்த்துவதற்கான முடிவு மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று கூறினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அரிய தொலைக்காட்சி உரையை ஹான்காக் வரவேற்றார். ராணியின் உரை இன்று மாலை ஒளிபரப்பப்படவுள்ளது.

ராணியின் உரை எங்கள் உற்சாகத்தை உயர்த்தும் மற்றும் கொரோனாவிற்கு எதிராக போராடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என்று நம்புவதாக கூறினார்