பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2020

இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்ற கா.பொ.த சாதாரண பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 7 பேர் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் , குறுகிய அளவான உத்தியோகஸ்தர்களை பயன்படுத்தி பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒரு போதும் ஒத்திவைக்கமாட்டாது என்றும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன