பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2020

நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியாத சூழ்நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் றாடாளுமன்றத்தின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது