பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2020

கனடாவில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மூன்று இலக்க உயிரிழப்பு

கனடாவில் கடந்த இரண்டு நாட்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று உயிரழப்பு நேற்று திடீரென 103 பேராக அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி 31 பேரும், 2ஆம் திகதி 69 பேரும் மாத்திரமே கொரோனாவினால் உயிரிழந்திருந்தனர். எனினும், நேற்று 103 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிதாக தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை கடந்த ஒருவாரமாக குறைந்து வரும் நிலையில் நேற்று 675 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இதுவரை 93,085 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும், 7,498 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 51,048 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,