பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2020

அதிக கொரோனா இறப்பை எதிர்கொண்ட சுவிஸின் முதியோர் இல்லம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்..!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து துர்காவ் மண்டலத்தில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 39 என அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஒரு முதியோர் இல்லம் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

துர்காவ் மண்டலத்தில் உள்ள "Weinfelden" முதியோர் இல்லத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும், 33 முதியவர்களுக்கு இதே இல்லத்தில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, 78 பேர் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மண்டலம் மொத்தம் கொரோனாவுக்கு 39 பேர் மரணமடைந்துள்ள நிலையில், ஒரே ஒரு முதியோர் இல்லத்தில் மட்டும் 14 பேர் இறந்துள்ளது தற்போது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.