பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2020

சிரமத்துடன் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர்- அமர்ந்திருந்தும் வாசித்தார். Top News

www.pungudutivuswiss.com
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச பெரிதும் சிரமப்பட்டே வாசித்து முடித்துள்ளார். பிற்பகல் 1.40 மணியளவில் வரவுசெலவுத் திட்ட உரையை ஆரம்பித்த பிரதமர்,ஒரு மணித்தியாலம் முடிந்த பின்னர், 10 நிமிட தேநீர் இடைவேளைக்கு அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து 30 நிமிட தேநீர் இடைவேளையை அறிவித்தார் சபாநாயகர். மீண்டும் சபை கூடியதும் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் தொடர்ந்து நிகழ்ந்தினார், இதன்போது நின்று கொண்டே உரையை வாசிக்க முடியாமல் திணறிய பிரதமர், அமர்ந்திருந்து உரையை வாசிக்க சபையின் அனுமதி கோரினார். அதன் பின்னர் அமர்ந்திருந்தவாறு அவர் வரவுசெலவுத் திட்ட உரையை வாசித்து முடித்தார்.