பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2020

மாவீரர் வார தொடக்கம் - மணி தலைமையில் அஞ்சலி!

www.pungudutivuswiss.com
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் நேற்று மாலை இந்த நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.