பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2020

ஜனவரி 20 உணவகங்கள் திறப்பது நிச்சயமல்ல - பிரதமர் அதிரடி

www.pungudutivuswiss.com
அரசாங்கம் அறிவித்தது போல் உணவகங்கள், மதுச்சாலைகள், தேநீர் விடுதிகள் போன்ற எதுவும், மீண்டும் ஜனவரி 20ம் திகதி திறக்கலாம் என்பது நிச்சயமானது அல்ல என, தற்பொழுது பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் அறிவித்துள்ளார்.
 
நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்களின் பின்னர், கொரேனாத் தொற்று மீண்டும், மிக அதிகமாகப் பரவும் அச்சம் உள்ளமையாலும், மக்கள் அவதானமில்லாமல் நடந்து கொண்டாலும், மேற்கண்ட பொதுமக்களை உள்வாங்கும் அனைத்து இடங்களும், உணவகங்கள், மதுச்சாலைகள், தேநீர் விடுதிகள் போன்றவையும், துரதிஸ்டவசமாகத் தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.