வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
www.pungudutivuswiss.com
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.