பக்கங்கள்

பக்கங்கள்

14 டிச., 2020

வலிகாமத்தில் 73 பாடசாலைகளை மூட உத்தரவு!

www.pungudutivuswiss.com
வலிகாமம் கல்வி வலயத்தில், 73 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்தில் 33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.